உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு அதிகாரசபையின் நிதி நடவடிக்கைகள் பற்றிய உள்ளகக் கட்டுப்பாட்டுக்காக தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் தொடர்ச்சியான ஆராய்ச்சி, நிதி மற்றும் ஏனைய நடவடிக்கைசார் கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைமுறைகள் சுயாதீனமான முறையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
இதன் முக்கிய நோக்கமாக இருப்பது தவறுகள் மற்றும் மோசடிகளை தடுத்தல் மற்றும் வெளிப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட உள்ளக கண்காணிப்பின் தொடர்ச்சியான மற்றும் போதியளவான தன்மையை உறுதி செய்வதன் மூலம் 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்திற்கு அமைய, தேவையான சந்தர்ப்பத்தில் அதிகாரசபையின் உயர்மட்ட நிருவாக நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கி ஒட்டுமொத்த நிருவாகத்திற்கும் வழிகாட்டுவதாகும்.
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகளின் விளைதிறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
- கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவினால் வழிகாட்டப்படுகின்றவாறு செயலாற்றுகையை பலப்படுத்தல்.
- முகாமைத்துவத்துக்கு தீர்மானம் மேற்கொள்ளப் பயன்படக்கூடிய வகையில் வருடாந்த உள்ளகக் கணக்காய்வு திட்டம் மற்றும் மாதாந்த கணக்காய்வை நடாத்தல் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- தவறுகள் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கான உள்ளகக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைமை போதியளவில் உள்ளதா என்பதை உறுதி செய்தல்.
- பொது மக்கள் விடயத்தில் பிரதானமாக உள்ள அமைச்சு மற்றும் திறைசோியினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படுகின்ற தாபன விதிக்கோவை, அரசாங்க நிதி ஏற்பாடுகள், ஏனைய குறைநிரப்பு சிபாரிசுகள், அரசாங்க சுற்றறிக்கைகளை பின்பற்றல் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமைத்துவத்தை விழிப்புணர்வூட்டல்.
- விளைதிறன்மிக்க தவறுகள் அற்ற நடவடிக்கை செயன்முறைக்காக மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்திக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் விசேட விசாரணைகளை அமுல்படுத்தல்.
- வருடாந்த செயற்றிட்டம், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விசேட கருத்திட்டங்களின் முன்னேற்றத்தை நிர்ணயித்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் திட்டங்கள் எந்தளவுக்கு இலக்குகளை அடைந்துள்ளன என்பதன் இடைவெளியை பகுப்பாய்வு செய்து, முகாமைத்துவத்துக்கு வெளிப்படுத்தி அவற்றைத் தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல்.
- கணக்காய்வு பரிசோதனைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் அரசாங்க கணக்காய்வாளரை ஒருங்கிணைப்புச் செய்தல், உரிய நேரத்திற்கு கணக்காய்வு வினாக்களை சமர்ப்பித்தல், உள்ளகக் கணக்காய்வு தொடர்பிலான நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமைத்தும் சார்பாக நிலையான தொடர்பைப் பேணிவருதல்.