அனைத்து வகையான சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கண்காணிக்கும் பொறுப்புக்களை வலியுறுத்தும் பிரிவு 14 (g ),(k) க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்த நிறைவேற்றுவதற்கு பொருத்தமான நடவடிக்கையாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விஷேட பொலிஸ் பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து புகார்களைப் பெறுவது மற்றும் தேவைப்படும் இடங்களில் முறையே அத்தகைய புகார்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புதல் போன்ற செயற்பாடுகளை இப்பிரிவு மேற்கொள்கிறது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் செயற்பணி :
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் இயங்கிவருகின்ற 1929 சிறுவர் உதவித் தொலைபேசி சேவைக்கு கிடைக்கின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகளை உடனடியாக உரிய பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்தல் மற்றும் 48 மணி நேரத்திற்குள் குறித்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய ஆரம்ப அறிக்கையை (First Report) பெற்றுக் கொண்டு, மேற்படி அறிக்கையை பகுப்பாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இதற்காக ஆண்டு முழுவதிலும் நாளாந்தம் 24 மணி நேரமும் விசேட பொலிஸ் விசாரணை பிரிவின் சேவைகளை தொடர்ச்சியாக பேணிவருதல்.
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மின்னஞ்சல் மற்றும் வேறு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம், தொலைபேசி மூலம், கடிதங்கள் மூலம் மற்றும் இந்த அதிகாரசபைக்கு வருகைதந்து சமர்ப்பிக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாக (முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில்) தவிசாளரின் ஆலோசனை மற்றும் சமர்ப்பித்தல்களுக்கு அமைய இந்தப் பிரிவினால் விசாரணைகளை மேற்கொள்ளல்.
- பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்ற மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தல், பாதிக்கப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ள பிள்ளையின் உரிமைகளுக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பாதுகாப்பற்ற பிள்ளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- விசாரணை செயன்முறையின் போது சந்தேக நபர்களை கைது செய்தல், விசாரணை செயன்முறையை அமுல்படுத்தல், அது சம்பந்தமான நீதிமன்ற செயன்முறையை மேற்கொள்ளல் மற்றும் பேணிவருதல்.
- அதிகாரசபைக்கு அறிக்கையிடப்படுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பாக சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளத் தேவையான விசாரணை பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகளை தயார் செய்து சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- மேலுள்ள விசாரணைகள் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள், பருவகால அறிக்கைகளை இற்றைப்படுத்திப் பேணிவருதல், உரிய தரவு அறிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- சிறுவர் துஷ்பிரயோக விசாரணைகளின் போது நேரடியாக சம்பந்தப்படுகின்ற கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், நீதிமன்ற மருத்துவ அலுவலகம், தொழில் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தொலைபேசிக் கம்பனிகள் போன்ற பல்வேறு நிறுவனங்களையும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்துக் கொள்வதற்காக பாடசாலைகள் மற்றும் சமுதாயத்தினர், பல்வேறு அரச, தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழில்வல்லுனர்களை விழிப்புணர்வூட்டும் விரிவுரைகளை நடாத்தல்.
- சேவை பெறுநர்களுக்கு முறைப்பாடுகளின் பிரதிகளை வெளியிடுதல்.
- பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் வீடியோ சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களை வழிப்படுத்தல்.