பற்றி NCPA | National Child Protection Authority
பற்றி NCPA Banner image

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்பது,

இலங்கை பாராளுமன்றத்தினால் “1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின்” மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தாபிக்கப்பட்டது.  

நோக்கம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல்.

நோக்கு

சிறுவர்களுக்கு சாதகமானதும், பாதுகாப்பானதுமான சூழலொன்றை கட்டியெழுப்புதல்.

செயற்பணி

சிறுவர்கள் சகல வகையிலுமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாத்தல்.

History of NCPA

2010

1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை அதிகாரசபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு 24 மணி நேரமும் முறையாகவும், வேகமாகவும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை அறிக்கையிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு உச்சளவில் நலனை செய்துகொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1989

1989 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி 'ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்' உலகப் பிரகடனமாக அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை அரசும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் 1990 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளதுடன், 1991 யூலை மாதம் 12 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரவை அங்கீகரித்துள்ள சிறுவர் சமவாயம் தயார் செய்யப்பட்டதுடன், சிறுவர் உரிமைகள் சமவாயத்தை ஒழுங்குறுத்தல் மற்றும் அவசியமான சந்தர்ப்பத்தில் சர்வதேச சிறுவர் உரிமைகள் சமவாயக் குழுவுக்கு அறிக்கையிடும் பொறுப்பைக் கொண்டுள்ள தேசிய கண்காணிப்புக் குழு தாபிக்கப்பட்டது.

2011

2011 இன் 17 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையான சிறுவர் பாதுகாப்புக் குழு முறைக்கு அமைய 2012 ஆம் ஆண்டில் முதலாவது பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டதுடன், 2019 இல் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.

2008

ஆம் ஆண்டு,

  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சிறுவர் துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய தினத்தை முதற் தடவையாக கொண்டாடப்பட்டது.
  • சுனாமியினால் இடம்பெயர்ந்திருந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தரவுக் களஞ்சியத்தை கட்டியெழுப்பியமை.
  • சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவின் கீழ் மத்திய அறிக்கை அறை தாபிக்கப்பட்டமை.
  • மேலும், முதற் தடவையாக சிறுவர் நட்புறவு நிலையமொன்று வவுனியா மாவட்ட செயலக வளவில் தாபிக்கப்பட்டது.

2006

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் நலன்புரி பொறிமுறையை தாபிப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் இதற்கென தனியான அமைச்சும் தாபிக்கப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கிவருகின்றது.

2005

சுனாமி அனர்த்தத்தை அடுத்து 2005 இன் 16 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சிறுவர்களின் நல்ல நிலைத்திருத்தலுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிதாக மென்மேலும் தத்துவமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2005 இன் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தின் மூலமும் ஒரு பிள்ளை குடும்ப வன்முறைக்கு ஆளாவது பற்றி அதிகாரசபைக்கு அறியக் கிடைக்கும் போது, அது சம்பந்தமாக மூன்றாம் தரப்பினராக அதில் தலையிட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தத்துவமளிக்கப்பட்டது.

 

2002

2002 மார்ச் மாதம் 27 ஆம் திகதி முன்னாள் சனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திருமதி லின்டா டுபில்ட்டின் தலைமையில் பிரித்தானிய அரசின் நிதி உதவியின் கீழ் புதிய அலுவலகம், தற்போது காணப்படுகின்ற இலக்கம் 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, கோட்டே எனும் இடத்தில் திறந்துவைக்கப்பட்டது. மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் விசேட பொலிஸ் விசாரணை அலகும் இணைக்கப்பட்டது.

1998

சனாதிபதி செயலணி சமர்ப்பித்திருந்த மிகவும் முக்கியமான சிபாரிசாக இருப்பது, சனாதிபதி செயலகத்தின் கீழ் 1998 இன் 50 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையைத் தாபிப்பதாகும்.

1998 ஆகஸ்ட் மாதம் அப்போதைய நீதி அமைச்சினால் 1998 இன் 50 ஆம் இலக்க “தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம்” பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 1998 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1998 இன் 50 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய, 1994 யூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாரசபை சபையின் தவிசாளாராக, பேராசிரியர் திரு டி.ஜி. ஹரேந்திர டி சில்வா அவர்களும் மற்றும் அதிகாரசபையின் நிருவாக சபையும் நிமயனம் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரசபை இயங்க ஆரம்பித்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முதலாவது அலுவலகம் சனாதிபதி செயலகத்தின் பிரிவொன்றாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இது சனாதிபதி செயலகத்தின் நிருவாகம் மற்றும் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருந்தது.

1996

1996 ஆம் ஆண்டு அப்போதைய சனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பற்றிய சனாதிபதி செயலணியை நியமனம் செய்தார். சனாதிபதி செயலணியின் அறிக்கையில் உள்ளடங்குகின்ற சட்டரீதியான திருத்தங்கள் மற்றும் நிருவாக ரீதியான மறுசீரமைப்புக்கள் பல இச்செயலணியினால் சிபாரிசு செய்யப்பட்டன.

1929

சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை அதிகாரசபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு 24 மணி நேரமும் முறையாகவும், வேகமாகவும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை அறிக்கையிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு உச்சளவில் நலனை செய்துகொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Functions of NCPA

  • (அ) சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதும் அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்ற சிறுவர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயார்செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதும்..
  • (ஆ) சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
  • (இ) அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளானவர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
  • (ஈ) துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பாகவும், சிறுவர் நெறிபிறழ்வைத் தடுப்பதற்கான முறைமை பற்றியும் அறிவுறுத்தல்.
  • (உ) சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கின்ற பணிக்கும், அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும், தேவையான சகல வகையிலுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் அந்தப் பணிகளுக்கு உரிய அமைச்சுக்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட, பிரதேச செயலாளர்களினதும் அரசாங்க, தனியார் துறையினரினதும், அமைப்புகளின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளல்.
  • (ஊ) சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான தேசிய கொள்கையை பயன்மிக்கவாறு அமுல்படுத்துவதற்கு தேவையான சட்ட ரீதியான நிருவாக அல்லது வேறு திருத்தங்களை சிபாரிசு செய்தல்.
  • (எ) சகல வகையிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதை ஒழுங்குபடுத்தல்.
  • (ஏ) சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து புலனாய்வுகள் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை ஒழுங்குறுத்தல்.
  • (ஐ) ஆயுத மோதல்களின் அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதும், அவர்களின் உடல் மற்றும் உளவியல் நலன்புரிக்கு நடவடிக்கை எடுப்பதும் உட்பட அவ்வாறான சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை சமூகத்தில் மீள இணைத்துக் கொள்வதும்.
  • (ஓ) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்வதும் தேவையான சந்தர்ப்பங்களில் அந்த முறைப்பாடுகளை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதும். .
  • (ஒள) சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற கடுமையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்வது தொடர்பாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்குவதும் உதவி வழங்குவதும்.
  • (க) சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான தேசிய தரவுக் கட்டமைப்பை தயார் செய்வதும், அதனை பேணிவருவதும்.
  • (ங) சம்பந்தப்பட்ட அமைச்சுகள், வேறு நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெற்று சிறுவர்களுக்கு சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை ஆற்றுகின்ற சகல சமய மற்றும் மத சார்பான நிறுவனங்களை கண்காணிப்புச் செய்வதும் அது தொடர்பான ஒழுங்குறுத்தல்களும்.
  • (ச) சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ச்சிகளை நடாத்துவதும், மேம்படுத்துவதும், ஒருங்கிணைப்புச் செய்வதும்.
  • (ஞ) சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக மக்களுக்கு தகவல்களை பெற்றுக்கொடுப்பதும் கல்வியை பெற்றுக்கொடுப்பதும்.
  • (ட) சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்குள்ள வாய்ப்புக்களை குறைப்பதற்காக சுற்றுலாத்துறை நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்.
  • (ண) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செயலமர்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களை ஒழுங்குசெய்வதும் அதற்கான வசதிகளை செய்துகொடுப்பதும்.
  • (த) சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்திக் கொள்வதும், தடுப்பதும் அது தொடர்பாக வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைப்புகளைப் பேணி நடவடிக்கை மேற்கொள்வதும் தகவல்களை பரிமாற்றிக்கொள்வதும்.