தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டப் பிரிவினால், “1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்திற்கு” அமைய பல்வேறு பணிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்திற்கு மேலதிகமாக பின்வரும் சட்டங்கள் மூலமும் அதிகாரசபைக்கு தத்துவமளிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சுனாமி விசேட ஏற்பாடுகள் சட்டம்
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறை நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம்