1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14 ஆ் பிரிவுக்கு அமைய உளவியல் சமூகப் பிரிவின் செயற்பணியாக இருப்பது, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு, பெற்றோருக்கு, பாதுகாவலர்களுக்கு, தொழில்வல்லுநர்களுக்குத் தேவையான உளவியல் சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், 1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவைக்கு மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களுக்குக் கிடைக்கின்ற சேவைசார் உதவிக் கோரிக்கைகளுக்கு உளவியல் சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், உளவியல் சமூக விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டல், பயிற்சியளித்தல் மற்றும் வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதாகும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள உளவியல் சமூக பிரிவு மற்றும் மாவட்ட செயலகங்களின் மாவட்ட உளவியல் சமூக அலுவலர் (DCPO) மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (DCPO) மற்றும் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (DivCPO) ஊடாக இந்த உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.