உளவியல் சமூகப் பிரிவு | National Child Protection Authority
உளவியல் சமூகப் பிரிவு Banner image

உளவியல் சமூகப் பிரிவு

1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14 ஆ் பிரிவுக்கு அமைய உளவியல் சமூகப் பிரிவின் செயற்பணியாக இருப்பது, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு, பெற்றோருக்கு, பாதுகாவலர்களுக்கு, தொழில்வல்லுநர்களுக்குத் தேவையான உளவியல் சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், 1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவைக்கு மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களுக்குக் கிடைக்கின்ற சேவைசார் உதவிக் கோரிக்கைகளுக்கு உளவியல் சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், உளவியல் சமூக விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டல், பயிற்சியளித்தல் மற்றும் வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதாகும்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்  தலைமை அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள உளவியல் சமூக பிரிவு மற்றும் மாவட்ட செயலகங்களின் மாவட்ட உளவியல் சமூக அலுவலர் (DCPO) மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (DCPO) மற்றும் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (DivCPO) ஊடாக இந்த உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சேவைகள்

 • சிறுவர்களுக்குத் தேவையான உளவியல் சமூக வழிகாட்டல்கள், கண்காணிப்பு, அவசியமான தலையீடு செய்யும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புக் செய்தல் மற்றும் பின்னாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் போது 1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவைக்கு மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் (DCPO), மாவட்ட உளவியல் சமூக அலுவலர்களுக்கு (DPSO) மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களுக்குக் (DivCPO) கிடைக்கின்ற கோரிக்கைகளுக்கு உளவியல் சமூக உதவிகள் (ஆலோசனை, உளவியல் சமூக முதலுதவி, உளவியல் சமூக மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் வேறு) பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
 • இதற்கான சாய்சாலை உளவியல் நிபுணர்கள், உதவிப் பணிப்பாளர் (உளிவயல்) ஆலோசனை அலுவலர்கள், உதவி ஆலோசனை அலுவலர்கள் மற்றும் இயன்மருத்துவர்கள் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உளவியல் சமூக அலுவலர்கள் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பௌதீக மற்றும் ஒன்லையின் முறைகளில் இந்த சேவை நாடளாவிய ரீதியில் வழங்கப்படுகின்றது.

 • பாடசாலை மட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல் பயிற்சியளித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு சாகதமான ஒழுக்கக்கட்டுப்பாடு மற்றும் உளவியல் சமூக தலையீடு பற்றி விழிப்புணர்வூட்டல் / பயிற்சியளித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • பாடசாலை ஆசிரியர் ஆலோசகர்களுக்கு உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல் / பயிற்சியளித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சிறுவர்களுடன் பல்வேறு வகையிலும் தலையீடுகளை மேற்கொள்ளும் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உளவியல் சமூக முகாமைத்துவம் பற்றிய விசேட விழிப்புணர்வூட்டல் / பயிற்சியளித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள சிறுவர்கள் மற்றும் பதவியணியினருக்காக உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல் / முகாமைத்துவ பயிற்சியளித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சிறுவர் தடுத்துவைத்தல் நிலையங்களிலுள்ள பதவியணியினர் மற்றும் சிறுவர்களுக்கு உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல் / பயிற்சியளித்தல் / முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் சிறுவர்கள் மற்றும் பதவியணினருக்கு உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல் / பயிற்சியளித்தல் / முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான வழிகாட்டல் தொகுப்பு பற்றி அரசதுறை அலுவலர்களை விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்தல்.
 • உளவியல் சுகாதார அபிவிருத்தி மற்றும் உளவியல் சமூக உதவிகள் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • திறிய நிகழ்ச்சித்திட்டம் – பாதிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, பாதுகாப்பற்ற, மற்றும் அச்சுறுத்தலான நிலையிலுள்ள சிறுவர்களுக்கு உளவியல், சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சியபத்த சுரகும் – கரையோரங்களை மையமாகக் கொண்ட பிரதேசங்களில் வாழும் சிறுவர்களுக்கான சிறுவர் நட்புறவான மற்றும் பாதுகாப்பான சூழலை கட்டியெழுப்புவதற்கான சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.

 • துஷ்பிரயோகத்திற்கு ஆளான, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகக் கூடிய, குறித்த அச்சுறுத்தல் நிலையிலுள்ள மற்றும் உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் உளவியல் சிக்கல்களைக் கொண்டுள்ள சிறுவர்களை இனங்காணத் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளல்.
 • தேவையான சந்தர்ப்பங்களில் உரிய நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பல்வகை அணுகுமுறையின் (multidisciplinary approach) ஊடாக சம்பவ முகாமைத்துவம்.
 • சிறுவர்களின் உளவியல் சமூக நலனுக்காக பெற்றோருக்கு, பாதுகாவலர்களுக்கு மற்றும் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு ஆலோசனை மற்றும் உளவியல் சமூக தலையீடுகளை மேற்கொள்ளல்.

 • சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் சாட்சியங்களை வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு முன் ஆயத்தப்படுத்தல், ஆலோசனை மற்றும் ஏனைய உளவியல் சமூக தலையீடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.

 • மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உளவியல் சமூக அலுவலர்கள் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முறைப்பாடுகளை அனுப்பிவைத்தல், ஒருங்கிணைப்புச் செய்தல், கண்காணிப்புச் செய்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
 • சிறுவர் ஆலோசனை மற்றும் உளவியல் சமூக தலையீடுகளுக்கான “சித் சவிய” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், வைத்தியசாலைகள், மித்துரு பியச மற்றும் வேறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சேவைகளை அலுவலர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் உளவியல் சமூக நல்ல நிலைத்திருத்தலுக்கான ஆலோசனை, அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.

தேசிய வழிகாட்டல்கள்

 • இலங்கையில் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் (2019) ஐ தயார் செய்தல்
 • இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான குறைந்தபட்ச தரநியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை தயார் செ்யதல்

 

பாடவிதானம்

 • சாதாரண பகல்நேர பராமரிப்புப் பாடநெறி (தேசிய தொழில்சார் பயிற்சி -NVQ 4 )2017 வெளியீடு
 • பயிற்சி வழிகாட்டல்கள் (சாதாரண சிறுவர் அரவணைப்புப் பாடநெறி -NVQ 4) 2019 வெளியீடு

 

கையேடுகள் மற்றும் பல்வேறு வெளியீடுகள்

 • சீக்ஷா எனும் கையேடு – பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான சாதகமான ஒழுக்கக்கட்டுப்பாடு பற்றிய பயிற்சி சம்பந்தமான கையேடு
 • திடீர் அனர்த்த நிலைமைகளின் போது சிறுவர்களுக்கான உளவியல் சமூக முதலுதவி பற்றிய கையேடு
 • துண்டுப் பிரசுரங்கள் – சிறுவர்களுக்கு உளவியல் சமூக உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்
 • “சார பச” சம்பவக் கற்கைத் தொகுப்பு
 • வளப் பங்களிப்பு

சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களையும் தடுத்தல், சிறுவர் உளவியல் சுகாதாரம், சிறுவர் உளவியல் சமூக அபிவிருத்தி, சிறுவர் அபிவிருத்தி மற்றும் உளவியல் சமூக முகாமைத்துவம் சம்பந்தமான சகல விடயங்களுக்கும் அவசியமாகின்ற வளப் பங்களிப்பு, முன்பள்ளி மற்றும் பாடசாலைகள், கல்வி நிறுவகங்கள், பல்கலைக் கழகங்கள், பல்வேறு அரச, தனியார், அரசசார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.

Mrs. Priyangika Rathnayake

Assistant Director – Psychosocial
Read more