தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 1929 இலங்கை சிறுவர் உதவித் தொலைபேசி சேவை, கடிதங்கள், பெக்ஸ், மின்னஞ்சல், கண்காணிப்புக்கள், பத்திரிகைகள், வெகுசன ஊடகங்கள் மூலம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நேரடியாக வருகைதந்து மேற்கொள்ளும் எந்தவொரு முறைப்பாட்டுக்கும் இலக்கமொன்றைப் பெற்றுக் கொடுத்தல், ஆவணமயப்படுது்தல், முறைப்பாடுகளை பகிர்ந்தளித்தல், தரவு முறைமையில் உட்புகுத்தல் போன்ற பணிகள் அனைத்தும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, எந்தவொரு முறைப்பாட்டாளரும் அல்லது முறைப்பாடு பற்றிய ஏதேனுமொரு தகவலைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பான தகவல் தொியாத ஒருவர் ஆரம்பத்தில் தொடர்புகொள்ள வேண்டியது ஆவணக்காப்பகத்தையாகும்.
அதனூடாக முறைப்பாட்டை விசாரணை செய்யும் இடம் மற்றும் முறைப்பாட்டின் இலக்கம் போன்றவற்றை உங்களுக்கு சட்டபூர்வமாக பெற்றுத்தர முடியும்.