மனித வளத்துறை | National Child Protection Authority
மனித வளத்துறை Banner image

நமது பணி கலாச்சாரம்

1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்திற்கு அமைய அதிகாரசபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் தத்துவங்களுக்கு அமைய தயார் செய்யப்பட்ட அதிகாரசபையின் நோக்காக உள்ள சிறுவர்களுக்கு சிறுவர் சாதகமாக மற்றும் பாதுகாப்பான சூழலை கட்டியெழுப்புதல் மற்றும் அதிகாரசபையின் செயற்பணியான சிறுவர்கள் சகல வகையிலுமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பதை உறுதி செய்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்டு வருகின்ற பிரதான பணிகளை மென்மேலும் விளைதிறன்மிக்கவாறு நிறைவேற்றுவதற்காக “நிருவாகம் மற்றும் மனிதவளப் பிரிவு” மூலம் நிறைவேற்றப்படுகின்ற பணிகள் பின்வரமாறாகும்.

நிர்வாகம் மற்றும் மனிதவளத் துறையின் செயல்பாடுகள்

தேவையான பதவியணியை திட்டமிடல் – புதிய பதவிகளை ஏற்படுத்தல் / காணப்படுகின்ற பதவிகளை திருத்தம் செய்தல் /ஆட்சோ்ப்பு நடவடிக்கைமுறையை தயார் செய்தல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஊழியர்களை ஆட்சோ்ப்புச் செய்தல் (பத்திரிகை அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரி நோ்முகப் பரீட்சை / பரீட்சை நடாத்தி தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளை தொிவு செய்துகொள்ளல் )/ ஒப்பந்த அடிப்படையில் / கடமைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் /பதில் கடமையாற்றுவதன் அடிப்படையில் / கடமைகளை ஆற்றுவதன் அடிப்படையில் /கடமைகளை செய்வதன் அடிப்படையில் வெற்றிடங்களுக்கு ஊழியர்களை நியமனம் செய்தல்

தகுதிகாண் காலத்தை பூர்த்தி செய்துள்ள அதிகாரசபையின் அலுவலர்கள் / ஊழியர்களுக்கு வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகளை நடாத்தல் / ஊழியர்களை நிரந்தரமாக்கல் மற்றும் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஊழியர்களை உரிய காலப்பகுதிக்குள் தரப்படுத்தல்.

இடமாற்றல் நடவடிக்கைமுறைக்கு அமைய அதிகாரசபையின் அலுவலர்கள் / ஊழியர்களை தலைமை அலுவலகம் / பிரதேச செயலகங்கள்  / மாவட்ட செயலகங்களுக்கு இடமாற்றம் செய்வது சம்பந்தமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

பதவியணி அலுவலர்களின் /ஊழியர்களின் பயிற்சித் தேவைகளை இனங்காணல் / பயிற்சிகள் தொடர்பான வருடாந்த திட்டங்களை தயார் செய்தல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகளில் பதவியணி அலுவலர்களை ஈடுபடுத்தல்.

அரச சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு மேற்படி பயிற்சிகளை வழங்குவதற்காக 6 மாதம் எனும் உச்ச காலப்பகுதிக்கு நிறுவனத்தினுள் பயிற்சி பெற்றுக் கொடுக்கத் தேவையான நிருவாகம்சார் நடவடிக்கைகள், பயிற்சிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்கள் சம்பந்தமான வசதிகளை பெற்றுக் கொடுத்தல்.

பதவியணி அலுவலர்கள் /ஊழியர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு லீவு சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் /ஆவணங்களை இற்றைப்படுத்திப் பேணிவருதல் /மேலதிக நேரக் கொடுப்பனவு பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் /நாளாந்தம் வருகை தருவது பற்றிய தகவல்களை பேணிவருதல்.

பதவியணி அலுவலர்கள் / ஊழியர்களை அக்ரஹார காப்புறுதித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளல், வைத்திசாலைகளில் அனுமதிக்கப்படும் போது அதற்குரிய பயன்களை பதவியணி அலுவலர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

பதவியணி அலுவலர்கள் / ஊழியர்களின் மாதாந்த சம்பளங்களை தயார் செய்தல் / வருடாந்த சம்பள ஏற்றங்களை தயார் செய்தல் / பதில் கடமையாற்றும் கொடுப்பனவு / கடமைகளை நிறைவேற்றுவது பற்றிய கொடுப்பனவுகளை தயார் செய்தல்.

பதவியணி அலுவலர்கள் / ஊழியர்களின் சுயவிபரக் கோப்புகளை முறையாக பேணிவருதல் (நியமனம் / பதவி விலகல் / பதவி வெறிதாக்கல் / சேவை சான்றிதழ்களை வழங்குதல் / இடமாற்றம் பெற்றுக் கொடுத்தல் தொடர்பான சகல ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கோப்புக்களை முறையாக பேணிவருதல்.

அதிகாரசபை அலுவலர்களின் / ஊழியர்களின் சாதாரண நடத்தை மற்றும் ஒழுக்கத்தை பேணிவருவது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் / அலுவலர்களின் கவளைகள் குறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அதிகாரசபையின் தேவைகளின் போில் கட்டிடங்களை நிர்மாணிப்பது சம்பந்தமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.                                               

அதிகாரசபைக்கு உரித்தான கட்டிடங்கள் / அலுவலக உபகரணங்களை பராமரிப்புச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (சகல புதுப்பித்தல் நடவடிக்கைகள் / வருடாந்த சோ்விஸ் செய்வது பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அலுவலர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை செய்துகொடுப்பது பற்றிய நடவடிக்கைகள், சகல உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் குழுமத்தின் வாகனங்களை பராமரிப்புச் செய்தல் (புதுப்பித்தல் நடவடிக்கைகள் / பூரண சோ்விஸ் செய்தல் /வருமான உரிமப்பத்திரம் பெற்றுக் கொள்ளல் /காப்புறுதி செய்தல் / வாகன விபத்துக்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.

அதிகாரசபையின் செயற்றிட்டத்திற்கு அமைய தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமான வருடாந்த பெறுகை திட்டத்தை தயார் செய்தல் மற்றும் பெறுகை திட்டத்தை அமுல்படுத்தல்.

அதிகாரசபைக்கு நாளாந்தம் கிடைக்கின்ற கடிதங்களை உரிய பிரிவுகளுக்கு விநியோகித்தல் / அதிகாரசபையிடமிருந்து வேறு நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற கடிதங்களை தபால் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தல்.

நிருவாகப் பிரிவுக்கு உரித்தான பொருட்களை பொருட் கணிப்பீட்டு பதிவேட்டில் உட்புகுத்தல்.

  • வருடாந்த / காலாண்டு / மாதாந்த தகவல்கள் மற்றும் அறிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தல்.

( நிதி அமைச்சு / முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் / நோ்வரிசை அமைச்சு / கொம்ப்ட்ரோலர் நாயகம் திணைக்களம் / கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் )

எங்கள் குழு

Mr. Janaka Udaya Kumara

Assistant Director (Administration & Human Resource)
Read more

எங்களை தொடர்பு கொள்ள

Mr. Sampath Gunawardena

BLE (UoC), MAin Sociology (UoK), Diploma in Mgt (UoP), Member of Institute of Personnel Management

மின்னஞ்சல்: sampath.ncpa@gmail.com / admin@childprotection.gov.lk

தொலைபேசி: 011-2778911-12-14 (தொடர் இல - 134)

Mobile: 077-186640

இணையத்தளம்: www. Childprotection.gov.lk