தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் “நிகழ்ச்சித்திட்டங்கள் பிரிவினால்” 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைகள் சட்டத்திற்கமைய, நாட்டில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு தொழில் வல்லுனர்கள், நிறுவனங்கள் உட்பட பொது மக்களின் அறிவு, ஆற்றல்கள் மற்றும் திறன் அபிவிருத்தியை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டு சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் கிராமிய ரீதியாக, பிரதேச ரீதியாக, மாவட்ட செயலக மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் அமுல்படுத்தப்படுகின்றன.
அதற்கமைய, இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் மாவட்ட செயலகங்களில் சேவையாற்றி வருகின்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் (District Child Protection Officers - DCPOs) மாவட்ட உளவியல் சமூக அலுவலர்கள் (District Psychosocial Officers - DPSOs) மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வருகின்ற பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களினால் (Divisional Child Protection Officers - DivCPOs) அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்கான மாற்று அரவணைப்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சிறுவர் பாதுகாப்பு பற்றிய குறைந்தபட்ச தரநியமங்களை தயார் செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் (1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் (14) “உ” மற்றும் “க” பிரிவுகளுக்கு அமைய)