தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைக்கின்ற நிதி ஏற்பாடுகளுக்கு அமைய வருடாந்த செயற்றிட்டத்தை தயார் செய்தல் மற்றும் அதிகாரசபையினால் பேணிவரப்படுகின்ற அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை ஒழுங்குறுத்துவதை நாடு முழுவதிலும் மேற்கொள்வதற்காக திட்டமிடல் மற்றும் ஒழுங்குறுத்தல் அலகு தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அலகினால் நாடு முழுவதிலும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உளவியல் சமூக அலுவலர்கள் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், அதிகாரசபையினால் ஆற்றப்படுகின்ற சேவைகளை வினைத்திறனும், விளைதிறனும்மிக்கதாகவும், தரமாகவும் பெற்றுக் கொடுக்கத் தேவையான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன், இந்த அலகினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சகல பிரதேச ரீதியான ஒருங்கிணைப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சகல அரசுகள், கம்பனிகள் மற்றும் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்படுகின்றது.