தகவல் மற்றும் ஊடகப் பிரிவினால் 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (ஈ) பிரிவுக்கு அமைய துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரித்தான உரிமைகள் பற்றி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் முறைகள் பற்றி விழிப்புணர்வூட்டல், 14 (ஞ) பிரிவுக்கு அமைய சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மக்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கல்வியைப் பெற்றுக் கொடுத்தல், 14 (ட) பிரிவுக்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் அவற்றுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்தல் ஆகிய பிரிவுகளை தத்துவமுள்ளதாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அதற்கமைய, ஊடகம் மற்றும் தகவல் பிரிவு பின்வரும் பணிகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை பாடசாலைகள், கிராமிய, பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் அமுல்படுத்துகின்றது. இதன் போது இப்பணிகளுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுகின்ற சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection officer - DCPO) மாவட்ட உளவியல் சமூக அலுவலர் ( District Psychosocial Officer - DSPO) மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர் (Divisional Child Protection officer - DCPO) ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்றன.