வீடியோ சாட்சி அலகு | National Child Protection Authority
வீடியோ சாட்சி அலகு Banner image

சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான வீடியோ சாட்சியங்களை பதிவு செய்யும் பிரிவு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14 (ஒ) இற்கமைய விசாரணைகள் மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளான சிறுவர்களை மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதை தடுப்பது தொடர்பாக மற்றும் சாட்சியங்கள் மாற்றமடைவதற்குள்ள வாய்ப்பைக் கட்டுப்படுத்தல் மற்றும் பிள்ளைகளின் உச்சளவான நலனை கவனத்தில் கொண்டு இந்த வீடியோ சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் பிரிவு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வளவில் தாபிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடியோ சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் பிரிவு இலங்கையில் முதற் தடவையாக தாபிக்கப்பட்டுள்ள பிரிவாகும். மேலும், கராப்பிட்டிய மற்றும் ராகம ஆகிய வைத்தியசாலைகளின் வளவுகளிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏனைய வீடியோ சாட்சியங்களை பதிவு செய்யும் பிரிவுகள் தற்பொழுது தாபிக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, ஒவ்வொரு மாகாணத்திலும் வைத்தியசாலை வளவுகளில் இவ்வாறான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வீடியோ சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் பிரிவுகளை தாபிக்கும் பணிகள் ஏற்கெனவே துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பிரிவு 1999 இன் 32 ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் 286(அ), 308(அ), 360(அ), 363, 364(அ), 365, 365(அ) மற்றும் 356(ஆ) ஆகிய தவறுகள் தொடர்பிலான சாட்சியங்கள் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உளவியல் சமூக ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உளவியல் சமூக பிரிவின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேவைகள்

 • பதிவுடன்
 • நீதிமன்றத்திட்கு ஒப்படைத்தல்
 • முதன்மை நகலில் இருந்து தட்டச்சு தயார் செய்தல்
 • நீதி மன்றங்களில் சாட்சிகளை வழங்குதல்

 • வீடியோ சாட்சிகளை பதிவு செய்யும் பணியாளர்களுக்கான பயிற்சிகள்
 • காவல் துறையினருக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்

 

 • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வீடியோ சாட்சி பதிவு
 • ஒவ்வொரு மாகாணங்களிலும் வீடியோ சாட்சி பதிவு மையத்தினை நிறுவுதல்

 • வீடியோ சாட்சி பதிவு தொடர்பான நாளாந்த அறிக்கைகள்
 • வீடியோ சாட்சி பதிவு தொடர்பான மாதாந்தஅறிக்கைகள்
 • நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்த மாதாந்தஅறிக்கைகள்

எங்கள் குழு

Ms. Sajeewani Abeykoon (AAL)

Director (Law Enforcement)
Read more

Ms.Chandima Dunuwila (AAL)

Assistant Director - Law Enforcement
Read more

எங்களை தொடர்பு கொள்ள

Ms. Sajeewani Abeykoon

Head of Law Enforcement Division

Director  (Law Enforcement)

LL.B, LL.M (University of Colombo)

Email: law.enforce@childprotection.gov.lk 

           sajeewani.ncpa@gmail.com

Contact: 011-2778911-12-14  (Extension - 269)