தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிக்கையிடப்படுகின்ற 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பற்றிய முறைப்பாடுகளுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணையொன்று அவசியமெனின், மேற்படி விசாரணைகளுக்காக இப்பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 24,26,33,34,35,36,37,40 ஆகிய பிரிவுகளுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வது இப்பிரிவின் செயற்பணியாகும்.
விசாரணைப் பிரிவின் பணிகளாவன,
- 1. விசாரணைகளை நடாத்தல்.
- 2. தத்துவமளிக்கப்பட்ட அலுவலர்களாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
- 3. முறைப்பாடுகளை விசாரணைக்காக ஆற்றுப்படுத்தல்.
- 4. சம்பவங்களை கண்காணிப்புச் செய்தல்.
- 5. நீதிமன்ற உத்தரவுகளுக்கான தகவல்களை திரட்டல் மற்றும் விசாரணைகளை நடாத்தல்.
- 6. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக அலுவலர் மற்றும் பிரதேச அலுவலரிடம் ஆற்றுப்படுத்தி விசாரணை கண்காணிப்பு
- 7. சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான இறுதி அறிக்கையை தயார் செய்தல், சட்ட ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளத் தகுந்த நடவடிக்கைகள் அல்லது பிள்ளையின் உச்சளவான நலனை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமான செயற்பாடுகள்.
- 8. “பீ” அறிக்கை கோரல்.
- 9. அதிகாரசபைக்கு வருகைதந்து சமர்ப்பிக்கும் முறைப்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்ளல்.