சைபர் ஊடுருவல் பிரிவு | National Child Protection Authority
சைபர் ஊடுருவல் பிரிவு  Banner image

சைபர் ஊடுருவல் பிரிவு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கண்காணிப்புக்கான தத்துவங்களுக்கு அமைய இப்பிரிவு இயங்கிவருகின்றது. 2001 ஆம் ஆண்டு முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவு இலங்கையில் இணையத்தளக் குற்றச் செயல்களைத் தடுப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட முதலாவது அரசதுறைச் செயன்முறையாகும்.

சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஆபாச வெளியீடுகளை (தண்டனைச் சட்டக்கோவையின் 286 (அ) பிரிவுக்கு அமைய) தடுப்பதற்காக இப்பிரிவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் இடம்பெறுகின்ற சைபர் குற்றச் செயல்களை அறிக்கையிடுவதற்கான மிக்க இலகுவான மற்றும் வசதியான கருவியொன்றாக 1929 சிறுவர் பாதுகாப்பு செயலியை அறிமுகம் செய்ய முடியும். இதன் போது மேலும் 0773220032 எனும் தொலைபேசி இலக்கத்தின்

மூலம் வட்ஸ்எப், சைபர் மற்றும் ஏனைய சமூக ஊடக கணக்குகளின் ஊடாகவும் முறைப்பாடுகளுக்கு மேலதிக தகவல்கள் மற்றும் இணையத்தளங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொடுக்க முடியும். இங்கு,

  • இணையத்தள சிறுவர் துஷ்பிரயோகத்தை கண்காணிப்புச் செய்தல்.
  • இணையத்தள சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளல்.
  • இணையத்தள சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் பற்றிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல்.
  • சிறுவர் துஷ்பிரயோக தகவல்களை இணையத்தளம் ஊடாக பகிர்ந்தளிப்பதற்கு தடை ஏற்படுத்தல்.
  • இணையத்தளப் பாதுகாப்பு பற்றி பாடசாலை மாணவர்கள், பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள், பாடசாலை ஊடக கழக உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறைசார் அலுவலர்கள், இளம் சமுதாயத்தினர், முதியவர்கள், அலுவலர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களை விழிப்புணர்வூட்டல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகாரளிப்பதற்கான சர்வதேச அறிக்கையிடல் இணைய முகப்பு தற்போது நிகழ்நிலையில் காணப்படுகிறது.

 

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை  உள்ளடக்கிய  படம் அல்லது வீடியோவை நிகழ்நிலையில் பார்த்துள்ளீர்களா?

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது தற்போது இலங்கை இணைய அறக்கட்டளை IWF ஐக்கிய இராச்சிய நிறுவனத்துடன் இணைந்து இணையத்தில் காணப்படுகின்ற சிறுவர் பாலியல் படங்களை அகற்றுவதற்காக புதியதொரு இணைய முகப்பொன்றை அறிமுகப்படுத்துகின்றது.

இந்த அறிக்கையிடல் நிகழ்நிலையானது இணைய கண்காணிப்பு அறக்கட்டளை (IWF) மூலம் நிர்வகிக்கப்படும். மற்றும் இணையத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை  அகற்றுவதற்கும் இது இலங்கைக்கான ஒரு பொறிமுறையாகும்.IWF என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். இந் நிறுவனமானது இணையம் மற்றும் தொழில்நுட்பத் தொழில்கள், உலகளாவிய சட்ட அமுலாக்கம், அரசாங்கங்கள், கல்வித் துறை ,தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து சிறுவர்களுக்கு இடையூறு செய்யப்படும் பாலியல் துஷ்பிரயோக படங்கள் மற்றும் வீடியோக்களை குறைப்பதற்கும், அத்துடன் அவ்வாறான விடயங்களை சீர்குலைப்பதுடன்  அதனை தடுக்கவும் அவர்கள் உலகெங்கிலும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இலங்கை இணைய கண்காணிப்பு அறக்கட்டளையால் (IWF) செயலாக்கப்பட்ட ஒவ்வொரு அறிக்கையும் குற்றவாளியின் உள்ளடக்கத்தை கண்டறிவதற்கும், மதிப்பீட்டின் போது உள்ளடக்கம் செய்யப்பட்டிருக்கும் குற்றவாளியின் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் புவியியல் ரீதியாக கண்டறிந்து தீர்மானிப்பதற்கும், தொழில்நுட்ப இணையத் தடமறிதல் நுட்பங்களைப் பயன்படுத்துவதில், அவர்களின் உயர் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் இவை மதிப்பிடப்படுகிறது. இது அவர்கள் சரியான விபரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்புவதற்கும் மற்றும் இச் சேவைகளை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் உதவுகிறது.

இலங்கைக்கான அறிக்கையிடல் முகப்பை அணுக, முகப்புப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள "நிகழ்நிலை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை புகாரளிக்கவும் " என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

 

 

எங்கள் குழு

Ms. Sajeewani Abeykoon (AAL)

Director (Law Enforcement)
Read more