சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது நாடு முழுவதும் மாவட்ட மற்றும் பிரதேசங்களில் காணப்படுகிறது . மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் (DCPO),மாவட்ட உளவியல் சமூக அதிகாரிகள் (DPSO) ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள்(Div.CPO) ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் மேற்பார்வையுடன் ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்கள்.
மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு சேவைகள்
சேவைகள்
- பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தலைமைதாங்குதல், ஒருங்கிணைப்பு, ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- 1929 சிறுவர் உதவித் தொலைபேசி சேவை மூலம் கிடைத்துள்ள அல்லது மாவட்ட செயலகங்களினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளல் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னேற்றத்தை அறிக்கையிடல்.
- முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல், உரிய நிறுவனங்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு, விசாரணை மற்றும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளல். தேவையான சந்தர்ப்பங்களில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட உளவியல் சமூக அலுவலர்களின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளல்.
- பிரதேச செயலக அதிகாரப் பிரதேசங்களில் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் செயன்முறைக்கு தலையீடு செய்தல்.
- பிரதேச செயலக அதிகாரப் பிரதேசம் தொடர்பான சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான வழக்குகளை ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
- நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் அதிகாரப் பிரதேசத்திற்குள் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தரவு முறைமையை பேணிவருதல் மற்றும் இற்றைப்படுத்தல்.
- தற்போது காணப்படுகின்ற தரவுகளின் அடிப்படையில் பிரதேச மட்டத்திலான ஆராய்ச்சிகளை நடாத்தல், சிறுவர் பாதுகாப்பு பற்றிய புதிய சிக்கல்கள் மற்றும் புதிய போக்குகளை இனங்காணல், சிக்கல்களை குறைத்துக் கொள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதேச செயலாளர் அதிகாரப் பிரதேசத்திற்குள் பல்வேறு சமுதாயத்தினரையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
- பல்வேறு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பிரதேச செயலாளர் அதிகாரப் பிரதேசத்திற்குள் ஒழுங்கு செய்யப்படுகின்ற சிறுவர் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களில் வளவாளர் ஒருவராக பங்களிப்பை வழங்குதல்.
- திடீர் அனர்த்தங்கள் மற்றும் மோதல்களினால் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களை பாதுகாக்கத் தேவையான லையீடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்தல்.
- சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பகல்நேர அரவணைப்பு நிலையங்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை ஒழுங்குறுத்தல் தரப்படுத்தல் மற்றும் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்திற்கமைய தத்துவங்களை அமுல்படுத்தல்.
- மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தலைமைதாங்குதல், ஒருங்கிணைப்பு, ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையிடப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்தல், மாவட்ட மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல், அறிக்கையிடப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல், உளவியல் சமூக தலையீடுகள், சம்பவக் கற்கை மதிப்பீடு, உரிய தரப்பினர்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் ஒழுங்குறுத்தல், பின்னாய்வு செய்த பின்னர் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக குறுங்கால மற்றும் நீண்டகால தலையீடுகளுக்கு உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்/ அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்தல். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தவிசாளருக்கு ஒவ்வொரு முறைப்பாட்டுக்குமான முதலாவது அறிக்கை கிடைத்த பின்னர் மாவட்ட உளவியல் சமூக அலுவலர்களின் தலையீட்டுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படும்.
- சித்சவிய நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் சிறுவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளும் ஆலோசனை சிகிச்சை மற்றும் உளவியல் சமூக சிகிச்சைகளை வழங்கும் சட்ட ரீதியான செயன்முறையின் போது சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள் மற்றும் ஆலோசனை மற்றும் தொழில் துறைகளுக்கான நிறுவனங்களுடன் (நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், சட்ட உதவி ஆணைக்குழு, உளவியல் மருத்துவர்கள் மற்றும் நீதிமன்ற மருத்துவர்கள்) ஒருங்கிணைப்புச் செய்தல்.
- சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்துக் கொள்ள மற்றும் குறைத்துக் கொள்வதற்கு மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உளவியல் சமூக நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
- சமுதாய அடிப்படையிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல், பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து உளவியல் சமூக நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல், கிராமங்கள், இளைஞர் கழகங்கள், சிவில் அமைப்புக்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் ஆலோசகர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- சிறுவர் ஆலோசனை நடத்தைசார் கட்டுப்பாடு, இசைசார் சிகிச்சை, சித்திரம்சார் சிகிச்சை, சட்டம் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- மாவட்ட மட்டத்தில் ஏனைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒழுங்கு செய்கின்ற உளவியல் சமூக விழிப்புணர்வூட்டல்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வளவாளர் பங்களிப்பைப் பெற்றுக் கொடுத்தல்.
- மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல், அச்சுறுத்தலான நிலையிலுள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை இற்றைப்படுத்துவதற்காக மற்றும் மீண்டும் பாதிக்கப்படாதிருப்பதற்காக தேவையான ஆலோசனை மற்றும் உளவயில் சமூக பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்தல்.
- மாவட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல்களை இனங்காணல், தற்போது காணப்படுகின்ற தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய புதிய போக்குகளை இனங்காணல், தேசிய மட்டத்திலான ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சிசார் சிக்கல்கள், அடிப்படைக் காரணங்களை சமர்ப்பித்தல் மற்றும் சிக்கல்களை குறைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல்.
- பகல்நேர அரவணைப்பு நிலையங்கள், சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சிறுவர்களை தடுத்துவைப்பதற்கான நிலையங்கள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை ஒழுங்குறுத்தல் மற்றும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் மேற்படி நிறுவனங்களின் உளவியல் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த பங்களிப்புச் செய்தல் மற்றும் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- திடீர் அனர்த்த நிலைமைகளின் போது சிறுவர்களின் உளவியல் சமூக நிமைமையை மேம்படுத்தல், நல்லதாக்கும் பொருட்டு தலையீடு செய்தல்.
- ஆசிரியர்களுக்கான ஆளுமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், வாழ்க்கைத்திறன் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கான உளவியல் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், களியாட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை ஒழுங்கு செய்தல்.
- மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களின் உளவியல் சமூக ஊழியர்கள் சம்பந்தமான கடமைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் இனங்கண்டுள்ள உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் உளவியல் சமூக தலையீடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- அரச சாட்சியாளராக நீதிமன்றங்கள், தொழில் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் இடம்பெறுகின்ற விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராதல்.
- 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்திற்கமைய தத்துவங்களை அமுல்படுத்தல்
- மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தலைமைதாங்குதல், ஒருங்கிணைப்பு, ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வை மேற்கொள்ளல்.
- பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களை ஒருங்கிணைப்புச் செய்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல் மற்றும் முன்னேற்றம் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்ளல், அமுல்படுத்தல், உரிய நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்தல், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல், ஒருங்கிணைப்பு, ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
- சிறுவர் உரிமைகள் பாதுகாக்கும் செயன்முறைக்கு தலையீடு செய்தல்.
- மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிறுவர்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் பற்றிய பின்னாய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல்.
- சிறுவர்களை சகல வகையிலுமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சமுதாயத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், தொழில்வல்லுனர்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வூட்டல்கள் மற்றும் பயிற்சிகளை நடாத்தல்.
- சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களை மீளாய்வு செய்வதற்கு பங்கேற்றல், ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான நீண்டகால மற்றும் குறுங்கால தலையீடுகளை மேற்கொள்ளல்.
- பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் பாடசாலை மாணவர் தூதுவர் நிகழ்ச்சித்திட்டங்களை வழிநடாத்தல், அமுல்படுத்தல், ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
- சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமே் போக்குகள் பற்றிய ஆராய்ச்சிகளை நடாத்தல்.
- வளவாளர் ஒருவராக மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
- மாவட்டத்தில் சிறுவர்கள் சம்பந்தமான தரவுகளை இற்றைப்படுத்தல் மற்றும் பேணிவருதல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய தரவு முறைமையை பேணிவருவதற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- மாவட்டத்தில் உள்ள சிறுவர்கள் பற்றிய தரவுகளை பகுப்பாய்வு செய்தல், பகுப்பாய்வின் அடிப்படையில் சிக்கல்களை இனங்காணல், நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் பிரதேச அலுவலர்களுடன் இணைந்து மேற்படி சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்க சாட்சியாளராக செயற்படுதல்.
- மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுகின்ற பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களின் கடமைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல்.
- சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை ஒழுங்குறுத்தல், தரப்படுத்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
- 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்திற்கமைய தத்துவங்களை அமுல்படுத்தல்.