நிதிப் பிரிவு | National Child Protection Authority
நிதிப் பிரிவு Banner image

நிதிப் பிரிவு

1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக 1971 இன் 38 ஆம் இலக்க நிதியதிகாரச் சட்டத்திற்கமைய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நிதிப் பிரிவு கட்டுப்பட்டுள்ளது.

நிதிப் பிரிவின் முக்கிய பணியாக இருப்பது திறைசோியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளைப் பின்பற்றி நிதி ஒழுங்குவிதிகள், இலங்கை அரச துறை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் தாபன விதிக் கோவைக்கு இசைவாக அரச நிதிகள், வெளிநாட்டுக் கொடைகள் போன்றவற்றின் கணக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

வருடாந்த மீண்டெழும் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை தயார் செய்தல், வருட இறுதிக் கணக்கு அறிக்கைகளை தயார் செய்தல், பல்வேறு செயலாற்றுகை அறிக்கைகளை உரிய தத்துவமளிக்கப்பட்ட நிறுவனங்களிடம் சமர்ப்பிப்பது நிதிப் பிரிவின் முக்கிய கடமைகளில் உள்ளடங்கும்.

அதிகாரசபைக்கு நிதி ஏற்பாடுகள் கிடைக்கின்ற பிரதான நிதி மூலமாக இருப்பது அரச திறைசோியாகும். எனவே, கிடைக்கின்ற நிதிகளை முறையாக பயன்படுத்துவதை நிதிப் பிரிவு மேற்கொள்ளல் வேண்டும்.

 

நிதிப் பிரிவின் செயற்பணி

 1. சகல பெறுகைகள் மற்றும் கொடுப்பனவுகளையும் சரியான முறையில் கணக்குப் பதிவு செய்தல்.
 1. அரச திறைசோியிடமிருந்தான மீண்டெழும் மற்றும் மூலதன பெறுகைகளை பின்வருமாறு பகிர்ந்தளித்தல்.
 • சம்பளம் மற்றும் வேறு மீண்டெழும் செலவினங்கள்
 • அபிவிருத்தி
 • அதிகாரசபையின் சொத்துக்களை கொள்வனவு செய்தல், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செய்தல்.
 • அதிகாரசபையின் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமுலபடுத்துவத்றகு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலர்களுக்கு நிதியைப் பெற்றுக் கொடுத்தல்.
 1. சகல பெறுகைகள் மற்றும் கொடுப்பனவுகளையும் காசேடு மற்றும் ஏனைய பேரேடுகளில் பதிவு செய்தல்.
 1. நோ்வரிசை அமைச்சு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் பணி பற்றிய இராஜாங்க அமைச்சான மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் அரச திறைசோிக்கு மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
 1. வருடாந்த பொருட் கணிப்பீட்டை மேற்கொள்ளல்.
 1. இருப்பு முகாமைத்துவம்.
 1. நிலையான சொத்துக்கள் பதிவேடு, முற்பணப் பதிவேடுகளை பேணிவருதல்.
 1. வருட இறுதிக் கணக்குகளை தயார் செய்தல் மற்றும் அவற்றை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தல்.

எங்கள் குழு

Mrs. Preethika Jayarathne

Director Finance (Acting)
Read more

Mrs.Deshika Malkanthi

Accountant
Read more

Mr. M.U.R. Wijeratne

Accounts Officer
Read more

எங்களை தொடர்பு கொள்ள

Mrs. Preethika Jayarathne

Director Acting (Finance)

Email: finance@childprotection.gov.lk

Contact: 011-2778911-12-14 (Extension - 263)

Mobile: 0777 35 84 40