சம்பவத்தின் தன்மைக்கு அமைய விசாரணைக்கு எடுக்கும் காலம் தீர்மானிக்கப்படும்.
இல்லை. அது பற்றிய அதிகாரம் இருப்பது நீதிமன்றத்துக்காகும்.
அதிகாரசபையின் தவிசாளருக்கு எழுத்துமூலமான கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
விசாரணை பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் விசாரணை செயன்முறைக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று தீர்மானிக்கப்படும் பட்சத்தில் அதிகாரசபை விசாரணை பற்றிய பிரதியை வெளியிடுவதில்லை.
முடியாது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவென அதற்கான தனியான விசேட சிறுவர் உதவித் தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1929 சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை, மின்னஞ்சல் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதம் மூலம் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பிக்க முடியும்.
1929 சேவையை வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளதனர் அலுவலர்கள் வேறு அழைப்பொன்றில் இருக்கும் போது தொடர்புகொள்ள முடியாதிருக்க முடியும். எனவே சற்றுக் காத்திருக்கவும். இன்றேல், மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவும்.
சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளும் சகல முறைப்பாடுகளும் முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ள போதிலும், முறைப்பாடு அல்லது சம்பவத்தின் கடுமையான தன்மைக்கு அமைய அதிகாரசபையினால் முன்னுரிமைப்படுத்திக் கருதப்படும். பிள்ளை தொடர்பில் திடீர் அச்சுறுத்தல், அபாயம் இல்லை எனின் அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் தலையீடு செய்வதை பார்க்கிலும் கூடுதல் அச்சுறுத்தலான அபாயகரமான முறைப்பாடுகள் தொடர்பில் தலையீடு செய்வது மேற்கொள்ளப்படும்.
இது பிள்ளை முகம் கொடுக்கும் துஷ்பிரயோகத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கின்ற உதவிக்கு அமைய தீர்மானிக்கப்படும்.
முறைப்பாட்டாளருக்கு வேறு சட்டத்தை அமுல்படுத்தும் ஒரு நிறுவனத்தினால் நியாயம் நிலைநாட்டப்பட்டிருக்காத சந்தர்ப்பமொன்றில் அல்லது தலையீடு செய்யும் ஆற்றலைக் கவனத்தில் கொண்டு அதிகாரசபையின் தவிசாளரினால் விசேட விசாரணையை ஆரம்பிக்க அங்கீகாரம் வழங்கப்படும்.
இல்லை. இந்த சேவைக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளவும்.
முடியாது. அதிகாரசபை அவ்வாறான உதவிகளை வழங்குவதில்லை.