ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கூற்றுப்படி சிறுவர் கடத்தல் ,இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:
- சட்டம்: ஆட்களை ஆட்சேர்ப்பு, போக்குவரத்து, இடமாற்றம், அடைக்கலம் அல்லது பாதுகாப்பு வழங்குதல்.
- நோக்கம்: தவறான சுரணடல் நோக்கத்திற்காக மற்றவர்களை தவறாகப் பயன்படுத்துதல், பாலியல் சுரண்டல், பலவந்த உழைப்பு, அடிமைத்தனம் அல்லது அதுபோன்ற நடைமுறைகள் மற்றும் உடல் உறுப்புக்களை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.
சிறுவர் விற்பனை என்றால் என்ன?
கடத்தலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை தவறான நோக்கத்திற்காக ஆட்சேர்ப்பு, போக்குவரத்து, ,இடமாற்றம், அடைக்கலம் அல்லது துஷ்பிரயோகம் செய்தல். அவர்கள் கட்டுமானத் தளங்களில் அல்லது வீடுகளில் வீட்டு வேலையாட்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படலாம், சிறுவர் பிச்சைக்காரர்களாக தெருக்களில், பண்ணைகளில், பயண விற்பனைக் குழுக்கள் அல்லது உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில், சிலர் விபச்சார விடுதிகளில் அல்லது பலவந்த மசாஜ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
- சிறுவர் கடத்தல் வகைகள்
செயற்பாடு நோக்கம் • ஆட்சேர்ப்பு.
• போக்குவரத்து.
• அடைக்களம்.
• நபர்களை பொறுப்பெடுத்தல்.
சுரண்டலுக்கு உட்பட்ட ஆனால் வரையறையற்ற
➜ விபச்சாரத்தில் துஷ்பிரயோகத்தில் அல்லது வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகம்.
➜ பலவந்தப்பட்ட வேலை அல்லது சேவைகள்.
➜ அடிமைகள் அல்லது அடிமையாக்கள் ஒத்த செயற்பாடுகள்.
➜ அடிமைத்தனம்.
➜ உடல் உறுப்புக்களுக்கான கடத்தல்.
கட்டுக்கதையும் உண்மையும்
கட்டுக்கதை: கடத்தல்காரர்கள் தங்களுக்கு தொரியாதவர்களை குறிவைக்கிறார்கள்.
உண்மை: பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்இ குடும்ப உறுப்பினர்இ காதல் துணை அல்லது தெரிந்த ஒருவரால் கடத்தப்படுகிறார்கள்.
கட்டுக்கதை: சிறுமிகளும் பெண்களும் மட்டுமே மனித கடத்தலுக்கு பலியாகின்றனர்.
உண்மை: சிறுவர்களும் ஆண்களும் போலவே சிறுமிகளும் பெண்களும் மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவை அடையாளம் காணப்பட்டு புகாரளிக்கப்படுவது குறைவு. சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பெரும்பாலும் பல்வேறு வகையான நோக்கங்களுக்காக கடத்தல்களுக்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக சிறுமிகள் கடத்தப்படலாம். அதே சமயம் சிறுவர்கள் கட்டாய வேலைக்காக கடத்தப்படலாம்.
கட்டுக்கதை: கடத்தப்படும் சிறுவர்கள் உடல் ரீதியாக வெளியேற முடியாது அல்லது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
உண்மை: கடத்தல் பலத்தை உள்ளடக்கியிருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல்கள்இ வற்புறுத்தல் அல்லது ஏமாற்றுதல் மூலமாகவும் மக்கள் கடத்தப்படலாம். கடத்தல் சூழ்நிலைகளில் உள்ள சிறுவர்களை போதைப்பொருள் பழக்கம்இ வன்முறையான உறவுகள்இ ஏமாற்றுதல்இ நிதி சுதந்திரமின்மை. குடும்பம் அல்லது நண்பர்களிடமிருந்து தூரப்படுவதன் மூலம் விற்பனைக்குட்;படும் நிலையில் உள்ள சிறுவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
- சிறுவர் கடத்தல் வகைகள்
- பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்தல்ஃவிபச்சாரத்திற்காக
- பலாத்காரமாக தொழிலில் ஈடுபடுத்துதல்ஃஅடிமைத் தொழில்
- வணிகத்திற்காக கடத்துதல்
- பாதிக்கப்பட்டவர்களிடம் அவதானிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்
- கடத்தலுக்குட்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட சிறுவர்களை கண்டறிவதற்கான சில அறிகுறிகள் இங்கே உள்ளன:
சிறுவர்கள் சமூக மற்றும் உணர்ச்சிகரமான அறிகுறிகளைக் காட்டலாம். - அதில் கவலைஇ மனச்சோர்வுஇ சித்தப்பிரமைஇ சுய உணர்வை இழந்தது போன்ற அறிகுறிகளை காட்டலாம். போதைப் பொருள் அல்லது மதுபான துஷ்பிரயோகம்இ மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரையறுக்கப்பட்ட அல்லது தொடர்பு இல்லாதது போல் கண்டறியப்படலாம்.
- சிறுவர்கள் மோசமான சுகாதாரம்இ ஊட்டச்சத்துச் குறைபாடுஇ சோர்வுஇ உடல்ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்ற உடல் அறிகுறிகளைக் காட்டலாம். குணப்படுத்தும் நிலைகளில் காயங்கள்ஃஅடையாளங்கள் இருக்கலாம். மேலும் அவர்கள் சொல்வதை விட இளமையாகத் தோற்றமளிக்கலாம்.
- கடத்தலுக்குட்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட சிறுவர்களை கண்டறிவதற்கான சில அறிகுறிகள் இங்கே உள்ளன:
- சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள்
- பிரிவு 3(அ)- ஐக்கிய நாடுகின் நெறிமுறை நபர்களை கடத்துவதைத் தடுக்கவும் அடக்கவும் மற்றும் தண்டிக்கவும் (பலேர்மோ புரோட்டோகால்)
நோக்கம்:(அ) பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது குறிப்பாக கவனம் செலுத்துதல்இ நபர்களை கடத்துவதைத் தடுக்கவும் மற்றும் எதிர்த்து போராடவும்.
(ஆ) அத்தகைய கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் மனித உரிமைகளுக்கு முழு மரியாதையுடன்பாதுகாத்து உதவுதல்; மற்றும்.
(இ) அந்த நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக மாநில நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
- பிரிவு 360இ(1)(இ) -இலங்கையின் தண்டனைச் சட்டம்இ நீங்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.
குறிப்பு: ழூ 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.
- பிரிவு 3(அ)- ஐக்கிய நாடுகின் நெறிமுறை நபர்களை கடத்துவதைத் தடுக்கவும் அடக்கவும் மற்றும் தண்டிக்கவும் (பலேர்மோ புரோட்டோகால்)
- சிறுவர் கடத்தலுக்கு ஒரு சிறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால் என்ன செய்வது :
சிறுவர் கடத்தலில் சிறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால் முதலில் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.
பிறகு அதை கண்டுபிடிக்க புகாரளிக்கவும். அதை நிறுத்தவும்.
சிறுவர் கடத்தல் குறித்து புகாரளிக்க 109 அல்லது 1929க்கு அழைக்கவும்.
போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் சிறுவர் பாதுகாப்பு குறித்த மன்றம் என்பது என்ன?
01 ஜூலை 2024 இன் படி மன்ற உறுப்பினர்கள்:
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை(NCPA)
- தேசிய சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை(SLTDA)
- நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்(DPCCS)
- குடிவரவுத் திணைக்களம்
- தொழிலாளர் திணைக்களம்(DOL)
- இலங்கை காவல்துறை-சுற்றுலாப்பிரிவுஇ இணைய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கண்காணிப்புப் பிரிவு மற்றும் பெண்கள் பணியகங்கள்
- இலங்கை வர்த்தக சம்மேளனம்
- இலங்கை தகவல் தொழிநுட்ப தொழில் கூட்டமைப்பு
- நிலையான இலங்கை
- சிறுவர் உரிமைகள் மற்றும் வணிகத்திற்கான மையம்(CCRB)
- வாக்கர் சுற்றுப்பயணம்
- ஆம்கோர்(AMCOR)
- இலங்கை சிறுவர்களின் மகிழ்ச்சிக்கான மையம்(CCH)
- சுற்றுச்சூழல் மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு(ECPAT)
- இகுய்ட் ஸ்ரீ லங்கா
- குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம்(FPA)
- சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு(OECRP)
- சேப் பவுண்டேஷன்
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO)
- புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு
- சேவ் த சில்ட்ரன் இன்டர்நெஷனல்
- ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிலையம்
- மனித நேயம் மற்றும் விஞ்ஞான பீடம்இ இலங்கைத் தகவல் தொழிநுட்ப நிறுவனம்(SLIIT).
