சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கான தன்னார்வ வழக்கறிஞர்கள் குழு - Pro Bono Lawyers' Pool | National Child Protection Authority
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கான தன்னார்வ வழக்கறிஞர்கள் குழு -  Pro Bono Lawyers' Pool Banner image
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கான தன்னார்வ வழக்கறிஞர்கள் குழு - Pro Bono Lawyers' Pool

 

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கான தன்னார்வ வழக்கறிஞர்கள் குழு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் தெரிவிக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களின் உரிமைகளுக்கான கௌரவமான சேவையாக சட்டத்தரணிகளின் சேவைகளைப் பெறுவதற்கு சட்டத்தரணிகள் குழுவொன்றை தயார் செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எதிர்பார்க்கிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது, நீதிமன்றத்தில் ஆஜராகி, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் சார்பாக சாட்சியங்களை வழங்குவதற்கும் கடமைகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து பணியாற்றக்கூடிய தகுதி வாய்ந்த சட்டத்தரணிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோர எதிர்பார்க்கின்றது.

1. வழக்கறிஞராக 10 ஆண்டுகளுக்கு மேல் தொழில்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் அல்லது உயர் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு ஆஜராகி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. அனைத்து தொழில்முறை செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளையும் வழக்கறிஞர்கள் ஏற்க வேண்டும்.
4. அதிகாரசபையுடன் ஒரு இரகசியத்தன்மை சாத்தியபிரமானத்தை உள்ளிட வேண்டும்
5. விண்ணப்பத்தில் நீங்கள் சட்ட சேவைகளை வழங்கக்கூடிய நீதிமன்றங்களின் இடங்களைக் குறிப்பிடவும்.

உங்களின் விண்ணப்பங்களை 30.01.2025 க்கு முன் chairman@childprotection.gov.lk  என்ற முகவரிக்கு அனுப்பவும்.


தலைவர்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
எண். 330, தலவத்துகொட வீதி, மாதிவெல,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை.