"சித்துவிலி சித்தம்" - 2026
அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2026 அக்டோபர் 1 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில், சமூகத்தை மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புபவர்களிடமிருந்து தொடர்ந்து 6 வது ஆண்டாக "சித்துவிலி சித்தம்" சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிக்கான ஓவியங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அழைப்பு விடுக்கிறது..
இந்தப் போட்டி இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் - பாடசாலைப் பிரிவு மற்றும் திறந்த பிரிவு.
• சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் ஆக்கங்கள் A4 அளவு தாளில் பஸ்டல், வாட்டர் கலர் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி வரைதல் வேண்டும்.
• ஓவியங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி ஜூன் 30, 2026 ஆகும். ஓவியங்களை ஜூன் 30, 2026 அன்று அல்லது அதற்கு முன் பதிவு அஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் நேரடியாக கையளித்து சமர்ப்பிக்க வேண்டும்.
• மேலதிக தகவல்களுக்காக, கீழே உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.
சிங்கள மொழி மூலமான விசாரணைகளுக்கு - தனுஷ்க சேனாரத்ன - 0715 789 775
தமிழ் மொழி மூலமான விசாரணைகளுக்கு - ஆர்.ரவிராஜ் - 0779 231 583
பொதுவான விசாரணைகளுக்கு - NCPA ஊடகப் பிரிவு - 0115 -77 89 11 (தொடர் இலக்கம் : 181 / 128)
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உளவியல் சமூக அலுவலர்கள் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து மேலதிக விவரங்களைப் பெறலாம்.
உங்கள் ஓவியங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, எண்: 330, தலவதுகொட வீதி, மாதிவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுர.
மேலும் தகவலுக்கு கீழே உள்ள விளம்பரங்களைப் பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
